அண்டி மரேயை வீழ்த்திய ஜெக் டிராப்பர்

7 days ago
Tennis
(18 views)
aivarree.com

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் ஜெக் டிராப்பர் 7-6 (8-6) 6-2 என்ற கணக்கில் அண்டி மரேவை தோற்கடித்தார்.

21 வயதான அவர் இப்போது செவ்வாயன்று அமெரிக்க ஓபன் சாம்பியனான கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்கிறார்.

ஜெக் டிராப்பர், 2013இல் மரே முதன்முறையாக விம்பிள்டனை வென்றபோது 11 வயது சிறுவனாக சென்டர் கோர்ட்டில் இருந்தார்.

தன்னை மிகவும் ஊக்கப்படுத்திய ஒரு விளையாட்டு வீரர் அண்டி மரேயாகதான் இருக்கும் என்று டிரேப்பர் கூறியுள்ளார்.

அண்டி மரேவுக்கு எதிரான வெற்றியுடன் ஆடுகளத்திலிருந்து வெளியேறிய அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.