அசத்தும் இந்திய அணி | நியூசிலாந்தையும் வீழ்த்தியது

2 weeks ago
Cricket
(29 views)
aivarree.com

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசியாந்து வெறும் 108 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

மொஹமட் ஷமி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

பதிலளித்தாடிய இந்திய அணி, 20.1 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வென்றது. 

அணித்தலைவர் ரோஹித் சர்மா 50 பந்துகளில் 51 ஓட்டங்களையும், சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 75 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பெற்றனர். 

ஆட்ட நாயகனாக மொஹமட் ஷமி தெரிவானார். 

ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 3:0 என கைப்பற்றிய நிலையில், நியூசிலாந்துடனான தொடரையும் கைப்பற்றியுள்ளது.